பக்கம் எண் :

353

அம்மானை யந்தணர் சேரும ணிகாழி
எம்மானை யேத்தவல் லார்க்கிட ரில்லையே.     2
1582.



அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பாற்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமி னும்வினை யேகவே.      3


அந்தணர்கள் வாழும் அழகிய காழிப்பதியில் விளங்கும் எம் கடவுள்.
அத்தகையோனை ஏத்துவார்க்கு இடர் இல்லை.

     கு-ரை: நம் மானம்-நம் குற்றங்களாகிய ஆணவம், மாயை,
கன்மம் (மூன்றும்). மாற்றி-தீர்த்து, மாறச்செய்து, வீடுற்ற உயிர்களின்
நீங்கி ஏனையுயிர்களையுற்று. அருளாய்-சிவஞானமாகி. ‘மருமகன்’
மருமான் என்றானதுபோலப் ‘பெருமகன்’ பெருமான் என மருவிற்று.
பேயோடு கூத்தாடிய வரலாறு.

     புரிதல் - செய்தல். அருமகன் என்பது அம்மான் என்று மருவி
அருமைக்கடவுள் என்றதாம். எம்மான்-எம்கடவுள். மகன், மைந்தன்
என்பவை வீரன், ஆடவன், கடவுள் என்னும் பொருளில் ஆளப்பட்டன.
இடர்-கேவலாவத்தையும் சகலாவத்தையும் அவற்றுட்பட்ட துயரும்.

     3. பொ-ரை: தன்னிடம் அன்பு செய்து ஏத்தாதார் அளிக்கும்
படையலை உண்ணாதவன். பொய்யாக அடிமை செய்வாரிடம்
பொருந்தாதவன். புதுமைக்கும் புதியவன். நான்குவேதங்களை ஓதும்
வேதியர் நிறைந்த காழிப் பதியில் இருப்பவன். அத்தகையோனை நும்
இடர்போக ஏத்துவீராக.

     கு-ரை: அருந்தானை-உண்ணலாகாதென்ற நோன்பியை, ‘தன்
உடம்பின் ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க’ (நாலடி.80)
அன்பு-பக்தி. ஏத்தகில்லார்-ஏத்தமாட்டாதவர். அன்பு செய்து
ஏத்தமாட்டாதவரிடத்தில் யாதும் அருந்தாத (உண்ணாத) வனை.
பொய்யடிமைத் தொழில் செய்பவருள் பொருந்தாதவனை.

     விருந்தானை-புதியனை. வேதியர்-மறையோர். ஓதி-வேதம் ஓதி.
நும் வினைபோக ஏத்துமின்.