பக்கம் எண் :

354

1583.



புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை யந்தணர் காழிய மர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.     4


     4. பொ-ரை: புற்று வடிவானவன். புற்றில் வாழும் பாம்பினைத்
தன் அரைமீது சுற்றியவன். தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன்
பெருமைகளை விடுத்துப் பழகி யருள்பவன். அந்தணர்கள் நிறைந்த
காழிப்பதி மீது பற்றுடையவன். அவனைப் பற்றி நிற்பவர்கட்குப் பாவம்
இல்லை.

     கு-ரை: புற்றான்-புற்றானவன் (வன்மீகநாதன், புற்றிடங்கொண்டான்
என்பன திருவாரூர்ப் பெருமான் திருநாமங்கள். பந்தணைநல்லூர் முதலிய
வேறு தலங்களிலும் புற்றிடத்தில் இறைவன் எழுந்தருளிய உண்மையை
அறியலாம்). புற்று அரவம்-புற்றில் வாழும் பாம்பு. அரை-இடை. சுற்றான்
-சுற்றுதலுடையவன். பாம்பை இடுப்பிற் சுற்றியவன், தொண்டு செய்வார்
அவர் தம்மொடும்-தொண்டுகளைச் செய்பவராகிய அவரொடும். அற்றானை
-அற்றவர்க்கு அற்ற சிவனை. ‘அற்றவர்க்கு அற்ற சிவன்’ என்பதன்
தாற்பரியம் ஆராய்ந்து உணரத்தக்கது. எல்லாப்பற்றும் அற்றவர்க்கே
சிவபிரான் ‘பற்றற்றான்’ எனல் விளங்கும், “புற்றில் வாளரவும் அஞ்சேன்
பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும் ஓர் தெய்வந் தன்னை உண்டு என
நினைந்து எம் பெம்மாற்கு அற்றிலாதாவரைக் கண்டால் அம்ம நாம்
அஞ்சுமாறே” என்னுந் திருவாசகத்தின் கருத்தே ஈண்டுக் கொள்ளல்
வேண்டும். ‘அற்றவர்கள் நற்றுணைவன்’ (சம்பந்தர் திருக்கயிலாயம் 2).
‘பாவம் அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே’ (திருச்சாத்த
மங்கை. 6), ‘நெஞ்சு அற்றவர் அருவினை யிலரே. (திருச்சிறுகுடி.5), ‘உறவும்
ஆகி அற்றவர்களுக்கு மாநெதிகொடுத்து நீள்புவி இலங்கு சீர்ப்புறவ
மாநகர்க் கிறைவனே எனத் தெறகிலாவினையே’ (திருப்பிரமபுரம்.8),
‘உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற
ஆலவாய் ஆவதும் இதுவே’ (2). ‘தம் வினையான எலாம் அற அற்றவர்
ஆரூர் அரனெறி’ (அப்பர்.5) ‘அற்றவர்க்கு அன்பர்’ ‘அற்றுப் பற்றின்றி
யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணை யாவான்’ (திருவாஞ்சியம், 6)
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய்போற்றி’ ‘அற்றார்க் கருள்செய்யும்
ஐயாறன்னே’, ‘அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்,’ ‘அற்றவர்க்கு
அருள் செய்பாச்சிலாச் சிராமத்து அடிகள்’ ‘அற்றவனார் அடியார் தமக்கு’......