பக்கம் எண் :

355

1584.



நெதியானை நெஞ்சிடங் கொள்ளநி னைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமி னும்வினை பாறவே.        5
1585.



செப்பான மென்முலை யாளைத்தி கழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்திநி னைவார்தம்
ஒப்பானை யோதமு லாவுக டற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர்வி யந்தாரே.      6


நின்றியூரே’ ‘பங்கயச் சேவடிக்கே செல்ல அற்றனன் அற்றனன்’
‘சோற்றுத்துறையுள்... முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடிநாயூரன்’
‘ஒன்றுமிலாதவரைக் கழற்போதிறைஞ்சி’ (திருவாசகம், 524), ‘அற்றவர்க்கு
அற்றசிவன்’ (பொன்வண்ணத்தந்தாதி, 74. இருபா இருபஃது 20.) எனத்
தோத்திரமும் சாத்திரமும் இதனைப் பலமுறை குறித்தல் அறிதற்பாலது.
‘ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய்’ என்றதாலும் இதனை இனிதுணரலாம்.
இன்னும் பல இடங்களில் இதனைத் திருமுறைகள் வற்புறுத்துகின்றன.
பற்றான்-பற்று உடையவன்.

     5. பொ-ரை: நமக்கு நிதியாக விளங்குவோன். தம் நெஞ்சில்
அவன் எழுந்தருளுமாறு நினைப்பவர்க்கு நன்னெறி காட்டுபவன்.
மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சீகாழியைத்தன் ஊராகக்
கொண்டவன். அத்தகையோனை நும் வினை நீங்கப் பாடுவீராக.

     கு-ரை: நெதி - நிதி என்பதன் மரூஉ. இவ்வாறாள்வது
பயின்றுள்ளது. விதி- கட்டளை. கதி-நெறி. கார்-மேகம். பொழில்-சோலை.
பதி-நகர். பாற- அழிய.

     6. பொ-ரை: செப்புப் போன்ற மென்மையான தனங்களைக்
கொண்ட உமையம்மை திருமேனியின் இடப்பாகமாக வைத்துள்ளவன்.
தன் திருவடிகளை நினைபவர்களிடம் ஒப்பப் பழகுபவன். ‘கடல் நீர்
உலாவுவதும், கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியில்
மெய்ப்பொருளாக விளங்குபவன். அத்தகையோனை விரும்பி வழிபட்ட
மக்கள் பிறரால் வியந்துபோற்றப்படும் புகழ் உடையோர் ஆவர்.

     கு-ரை: செப்பு ஆன-செப்பை ஒத்த. மேனி-திருமேனியின்