பக்கம் எண் :

356

1586.



துன்பானைத் துன்பம ழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை யணிபொழிற் காழிந கர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.     7


இடப்பாதியில் வைப்பானை-வைத்தலுடையவனை. ‘வைப்பவனை’ எனின்
முக்காலத்தும் ஒத்தியல்வதாகாது. தொல்காப்பியம் ‘செய்யும்’ என்னும்
வாய்பாட்டு நிகழ்காலத்து வினையாற் சொல்க என்றது. (வினையியல். 43)
‘முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும்
நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்’
(பெயரியல், 19:) ‘நிகழூஉ நின்ற பால் வரை கிளவி’ (வினையியல். 30:)
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும்
நிகழுங்காலத்துச் செய்யும் என்னுங் கிளவியொடு கொள்ளா’. என்பவற்றை
நோக்குக. ஒப்பானை-ஒப்புதலுடையவனை. ‘பராவுசிவர்’ (தி.3 ப.67. பா.6,
சித்தியார். 287) என்ற உண்மையை நோக்குக. ஓதம்-கடலின் அலை,
குளிர்ச்சி மெய்ப்பான்-மெய்யாதலையுடையவன். அவனே மெய்ப்பொருள்.
மேவிய-விரும்பி வழிபட்ட, மாந்தர்-மனிதரிற் சிறந்தவர். வியந்தார்-பிறரால்
பேசப்படும் புகழ்க்குரியவர். பிறரை ஏவியாட்கொள்ளும் மேன்மையர்
எனலும் பொருந்தும். மெய்ப்பானை வியந்தாரெனலும் ஆம்.

     7. பொ-ரை: நம்மைத் திருத்துமாறு துன்பங்களைத் தருபவன். நாம்
துயர் உறும் போது, அத்துன்பங்களைத் தீர்த்து அருளைப்புரியும் இன்ப
வடிவாய் இருப்பவன். ஏழிசையின் கூறுகளை அறிந்து பாடிப்
போற்றுவாரிடம் அன்பு செய்பவன். அழகிய பொழில் சூழ்ந்த காழி நகரில்
நம்மால் விரும்பப்படுபவனாய் எழுந்தருளி யிருப்பவன். அத்தகையோனை
அடைந்து போற்ற வல்லாரின் வினைகள் அழியும்.

     கு-ரை: துன்பானை-துன்ப வடிவாயிருப்பவனை. அருள் ஆகிய
இன்பானை-சிவஞானந் தந்த பேரின்ப வடிவினனை, ‘இன்பமும் துன்பமும்
இல்லானே உள்ளானே’, ‘பந்தமுமாய் வீடும் ஆயினார்,’ ‘அருள் நிதிதர
வரும் ஆனந்தமலையே’ என்ற திருவாசகக் கருத்து இங்குக் கொள்ளற்பாலது.
‘இன்பமும் நீயே துன்பமும் நீயே’ (பெருந்தேவபாணி 59.) ஏழிசையின் நிலை
பேணுவார்-ஏழிசையின் நிலையை விரும்புவார். ’ஏழிசையாய் இசைப்பயனாய்’
‘இன்னிசை வீணையில் இசைந்தோன்’ ‘ஏழிசையோன் கொச்சையை
மெச்சினை’ எழுவகை யோசையும்...... .......ஆகிய பரமனை’ ‘ஏழிலின்னரம்
பிசைத்தனை’.