1587.
|
குன்றானைக்
குன்றெடுத் தான்புய நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானைந ணுகுமே. 8 |
1588.
|
சாவாயும்
வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டுவெகு ளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னானடி கூறுமே. 9 |
அன்பான்-அன்பு
வடிவானவன் அன்பேசிவம் ஆவது. அணி -
அழகு. நம்பான்-உயிர்களால் விரும்பப்படுபவன் நம்பும் மேவும்
நசையாகும்மே (தொல்காப்பியம்), நண்ண - விரும்ப, அடைய, செறிய
நாசம்-அழிவு.
8.
பொ-ரை:
மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன்.
தான் எழுந்தருளிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின்
இருபது தோள்களையும் வென்றவன். மெல்லிய தாமரை மலரில் வாழும்
நான்முகனும் மாலும் தேட ஓங்கி நின்றவன். உமையம்மையோடு
காழிப்பதியுள் நன்மைகளைச் செய்பவனாய் வீற்றிருப்பவன். அத்தகைய
நம் பெருமானை அடைந்து வழிபடுவீர்களா.
கு-ரை:
குன்றான்-கயிலை முதலிய குன்றுகளையுடையவன்.
குன்றெடுத்தான்-கயிலையைத் தூக்கிய இராவணன். வென்றான்-
நொறுக்கியவன். மலரான்-பிரமன். மால்-விண்டு. நேர் இழையாள்
-திருநிலைநாயகி. இழை-ஆபரணம். நன்றான்-பெரியவன்,
நல்லதுடையான், சிவன். குறைவிலா மங்கலக் குணத்தன். நணுகும்
முன்னிலை ஏவல் வினை.
9.
பொ-ரை:
தம் கொள்கைக்கு அழிவு வந்தபோதும் விடாதுவாது
செய்யும் சமணர் சாக்கியர்களின் பொருந்தாத உரைகளைக் கேட்டு
அவர்களையோ சைவத்தையோ, வெகுளாது கொன்றைப்பூ வணிந்தவனும்,
புனல் சூழ்ந்த காழி நகரின் தலைவனாய் மேலான சிவநெறிக்கு உரியவனும்
ஆகிய சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவீர்களாக.
கு-ரை:
சாவாயும் வாதுசெய்தல்-தம்கட்சி அழிந்தபோதும்
|