|
*
* * * * * 10 |
1589.
|
கழியார்சீ
ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானையு கந்துள்கித்
தழியார்சொன் ஞானசம் பந்தன்ற மிழார
மொழிவார்கண் மூவுல கும்பெறு வார்களே. 11
|
திருச்சிற்றம்பலம்
வாதம்புரிதல். சாவு
ஆயும் எனலுமாம். மேவாத-செல்லாத.
வெகுளேன்மின்-கோபிக்காதீர்கள், (ஏவல்வினை) பகைவனை வெறுத்தல்
வேண்டா என்றேனும், பகைவர் தீயுரைகேட்டுச் சைவத்தை வெறுத்தல்
வேண்டா என்றேனும் கருத்துக் கொள்ளலாம்.
அடிகூறும்-திருவடியைத்
துதிசெய்யுங்கள். கோ ஆய கொள்கையினான்
-பரத்து வக்கடவுளாகிய கொள்கைக்குரியவன்; பரமசிவன்.
10.
* * * * * *
11.
பொ-ரை: கழிகளின் வழியே வரும் மிக்க கடல்நீர் நிறைந்ததும்
கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியுள்கோயில் கொண்டு நீங்காது
உறையும் இறைவனை, நினைந்து மகிழ்ந்து அவனைப் பொருந்தியவனாய்,
ஞானசம்பந்தன் பாடிய தமிழை மனம் பொருந்த மொழிந்து போற்றுபவர்கள்
மூவுலகையும் பெறுவார்கள்.
கு-ரை:
கழி-கழிகள், ஆர்-பொருந்திய, சீர் ஓதம்-மிக்க கடல் நீர்.
உகந்து-விரும்பி. உள்கி-நினைந்து, தழி-தழுவி. ஆர்-பொருந்திய. ஆர-
நிறைய. மொழிவார்-பாடுவார். கள் விகுதி பிற்கால வழக்கில் வழங்குவது.
மூவுலகும்-மண், விண், பாதலம் மூன்றும், தழியார்-தழுவிய சிவஞானியர்,
சொல்-புகழ்ந்து போற்றுகின்ற எனலும் பொருந்தும்.
|