1593.
|
குன்றேய்க்கு
நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மின்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 4 |
1594.
|
சடையானைத்
தலைகையேந் திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 5
|
4.
பொ-ரை: குன்றுகள் போன்று உயர்ந்த சுதைமாடங்களில் கட்டிய
கொடிகள் கூடிச் சென்று மின்னல்கள் உராயும் முகில்களைத் தோயும்
விரிந்த கச்சிப்பதியில் பலவாறு மன்றுகளில் புகழப்படும் சீர்மையை
உடையவன் எழுந்தருளிய திருஏகம்பத்தை அடைந்து மனம் பொருந்த
வழிபாடு செய்யும் அடியவர்கள்மேல் வினைகள் சேரா.
கு-ரை:
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடம்:- நெடிய (உயரிய)
கதையால் தீற்றப்பட்ட மாடங்கள் மலைகளைப்போல் விளங்குகின்றன.
கொடி கூடிப்போய் மின்தேய்க்கும் முகில்கள் தோயும் அம்மாடங்களின்மேல்
கட்டிப் பறக்கவிட்ட துணிக்கொடிகள் எல்லாம் ஒருங்குசேர்ந்து சென்று
மின்னல்கள் ஒன்றோடொன்று உராயும் மேகமண்டலத்தை அளாவிப் படியும்.
மன்று-பிருதிவியம்பலத்தை. மிகுதியாப் பரவித் தேய்க்கும் சீரால் எனலுமாம்.
மல்குசீரான்-மிக்க சிறப்புடைய சிவபிரான். ஏய்க்கும்-பொருந்தச்செய்யும்.
5.
பொ-ரை: சடைமுடியை உடையவனும், தலையோட்டைக் கையில்
ஏந்திப் பலியிடுவார் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் உடல் பொருள்
ஆவி ஆகியவற்றைக் கொண்டவனும் ஆகிய ஆரவாரம் நிறைந்த கச்சிப்
பதியில் பொன்னிறமலர்கள் மலரும் கம்பை நதிக்கரையில் விளங்கும்
திருஏகம்பம் உடையானை அல்லது பிறரை எனது உள்ளம் விரும்பாது.
கு-ரை:
தலை ஏந்தி-தலையை (பிரமகபாலத்தை)க் கையில் தாங்கி,
தருவார்:-தாருகாவனத்துப் பெண்டிர், கடை-வாயிற் கடை, மூன்றும்-உடல்
பொருள் ஆவி எல்லாம். உயிர், நாண், கற்பு என்றலுமாம். புடை-நகரின்
பக்கங்களில். பொன் மலரும்-பொன் (போற்கொன்றைகள்) பூக்கும். பொன்
விளையும் எனல் பொருந்தாது. கம்பை-கம்பாநதி. உடையான்-சுவாமி.
உள்காது-நினையாது.
|