1595.
|
மழுவாளோ
டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. 6 |
1596.
|
விண்ணுளார்
மறைகள்வே தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின் றவலங் காரம்மே. 7
|
6.
பொ-ரை: மழுவாள் அழகிய சூலம் ஆகிய படைகளை ஏந்தியவர்.
தம்மிடம் பொருந்திய ஒளியுடையவர். இமயமலையின் உச்சியில் உறைபவர்.
உமையம்மை கங்கை ஆகியோருடன் கூடி அவர் எழுந்தருளிய பெருகும்
புகழ் பொருந்திய ஏகம்பத்தைத் தொழுபவரே விழுமியோர் ஆவர். அவரை
வினைகள் அணுகா.
கு-ரை:
மழு, வாள், சூலம் என்னும் படைகள் ஏந்தவல்லவர்.
வாள்-கட்கம், எழில்-அழகு, வல்லார்தம் ஏகம்பம், கெழுவாள், உமையாள்,
வாளோர் இமையர் (-இமயமலையர்). வாளோர்-ஒளியுடையவர். உச்சி,
பொது. உமையாளும் கங்கையும் மல்குசீர். வழுவாமே - தவறாமல்.
தொழுவாரே-வணங்குவாரே. விழுமியார்-சிறந்தவர். துன்னா-நெருங்கா.
7.
பொ-ரை: வானகத்தில் உறைபவர். மறைகளாகிய வேதங்களை
விரித்து ஓதுபவர்களின் கண்களின் ஒளிர்பவர். கருநிறம் உடைய காலனை
வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைத்து வென்றவர். தம்மைச் சரணாக
அடைபவர்களின் எழிலைக் கொள்ளும், கச்சி நகரில் விளங்கும்
திருஏகம்பத்துத்தலைவர் ஆடுகின்ற ஆடல் மிக்க அழகுடையது.
கு-ரை:
விண்ணிலும் வேதங்களை விரித்துப் பொருள்கூறும் அறிஞர்
கண்ணிலும் இருப்பவர். கரி(ந்த) காலன்-யமதர்மன். கழல்-திருவடிக்கு
ஆகுபெயர். யமனைக் காலால் உதைத்து வென்றவர். வெல்வார். நண்ணுவார்
-அடைவார், விரும்புவார் எழில் கொள்ளல்-வண்ணம்பெறல்.
நண்ணுவாரெழில் கொள்ளல்-இறைவன் தன்னைச் சேர்ந்தவர் வண்ணத்தைத்
தான் கொள்ளுதல்.பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்
அந்நிறம்
|