1597.
|
தூயானைத்
தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே. 8 |
1598.
|
நாகம்பூ
ணேறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்ப மேவியா டுமிறை யிருவர்க்கும்
மாகம்ப மறியும்வண்ணத்தவ னல்லனே. 9
|
அண்ணலும் அம்பிகையும்-(திருக்களிறு.
79) என்றும் (ஈறாகி. . .
முதலொன்றாய். . . எண் வகையாய். . . வேறாய். . . உருவுடைமை. . .
இருக்கின்றான் ((ஷ86) என்றும்) உள்ள சிவாகம வசனத்தை நோக்குக.
தந்தது உன்றன்னைக் கொண்டது என்றன்னை என்றதும் உணர்க.
நண்ணுவார் எழில் கொள்ள நகர் கொடுக்கும் என்ற கருத்தும் பொருந்தும்.
எழில்-சிவப் பொலிவு.
8.
பொ-ரை: தூயவன். தூயனவாகிய மறைகளை ஓதியவாயினன்.
ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த,
தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன்.
அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.
கு-ரை: தூயவனும், தூயனவாகிய மறைகளை ஓதியருளிய
வாயவனும்,
வாளேந்திய அரக்கனாகிய இராவணனது வலியை வாடச் செய்த தீயவனும்,
தீயது இல்லாத திருக்கச்சியேகம்பத்தில் மேவியவனும் ஆகிய
சிவபெருமானை விரும்பித்தொழுவார் என் தலைமேல் இருப்பவர். இத்
திருப்பாட்டின் ஈற்றடிப் பொருளால், திருஞானசம்பந்தர்க்குச்
சிவனடியாரிடத்திலுள்ள பத்திச் சிறப்பு விளங்குகின்றது.
9.
பொ-ரை: நாகம் அவனது அணிகலன். அவனது ஊர்தி விடை.
மணம் கமழும் கொன்றை அவனதுமாலை. ஒருபாகத்தில் பெண்ணைக்
கொண்டவன். பிச்சையும் ஏற்பவன். மறைகளைப் பாடுபவன். கச்சித் திரு
ஏகம்பத்தில் எழுந்தருளிய மகிழ்வோடு ஆடும் இறைவன். திருமால்
பிரமர்க்குப் பெரிய நடுக்கத்தைத் தருவதோடு அவர்களால் அறியத் தக்க
வண்ணத்தவன் அல்லன்.
|