1599.
|
போதியார்
பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே. 10 |
1600.
|
அந்தண்பூங்
கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால் |
கு-ரை:
பூண்நாகம், ஏறல்ஏறது, தார் நறுங்கொன்றை, பாகம் பெண்
என்று இயைத்து, சர்ப்பாபரணம், இடபவாகனம், கொன்றை மாலை,
மாதியலும் பாதியைக் கொண்டுரைக்க. பலியும் ஏற்பர்-பிச்சை கொள்வர்.
உம்மை பலியின் இழிவை மிகுத்து நின்றது. மறை-வேதம். ஏகம்பம்
மேவிஆடும் இறை-திருவேகம்பத்தில் (பிருதிவியம்பலத்தில்) எழுந்தருளிய
கடவுள், ஆட்டம்:- காமாட்சியம்மையாரைத் தன்பால் ஒடுக்கிய இடமாதலின்,
வகாரத்தைத் தன்பால் அடக்கிய சிகாரத்தின் நிலையாகிய சிவநந்தத்
தாண்டவம். இருவர்-பிரமவிட்டுணு. மாகம்பம்-அறியும் வண்ணத்தவன்
அல்லன்.
10. பொ-ரை: போதிமரநிழலில்
அமர்ந்த புத்தனை வணங்குவோரும்,
அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தமண
மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய
மாமர நிழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள்
விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். நும் மேல் வரும்
வினைகள் நில்லா.
கு-ரை: போதியார்-போதிமரத்தின்
கீழமர்ந்த புத்தனை
வணங்குவோர். பிண்டியார்-பிண்டி (அசோக) மரத்தின் கீழமர்ந்த
அருகனை வணங்குவோர். பொய்ந்நூல்-மெய்ப் பொருளை அறிந்தெழுதப்
படாத புத்தகம். வாதியா-வாதிக்காமல். வம்மின்-வாருங்கள். அம்-அழகிய.
மா-மாமரம். ஏகாம்பரம். மா எனும் கச்சி:- திருவேகம்பம் எனப்படும் கச்சி.
ஆதியார்-முதல்வர். நீதியால்-சிவாகம முறைப்படி. தொழுமின்-வழிபடுங்கள்.
நும்மேல்-உங்கள்பால், வினைநில்லா - கர்மம்பற்றா.
11. பொ-ரை:
அழகும் தண்மையும் பொலிவும் உடைய
கச்சிஏகம்பத்தில் விளங்கும் தலைவனைப்பற்றி, நீர் வளமும் தண்மையும்
அழகும் உடைய சீகாழிப் பதியுள் தோன்றியவனாய் ஒலிமாலை எனப்படும்
திருப்பதிகங்களால் இசைத்தமிழில் பாடவல்ல ஞானசம்பந்தன்
|