|
சந்தமே
பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே. 11
|
திருச்சிற்றம்பலம்
பாடிய இப்பதிகப் பாடல்களைப்
பாடி ஆடிப் போற்றப் பாவம்கெடும்.
கு-ரை:
அம்தண்பூ-அழகும் குளிர்ச்சியும் பொலிவும் பொருந்திய,
கந்தண் பூங்காழியூர்-நீரும் குளிர்ச்சியும் அழகும் உடைய சீகாழிப் பதி.
கலிக்கோவை-ஒலிமாலை. பூத முதல்வன் முதலே முதலாகப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே (தி.3 ப.54 பா.8)
என்று திருப்பாகரத்தில் அருளியது அறிக. சந்தம் - இசைப்பாடல்.
சொல்- சொல்மாலை, பாடி ஆடப்பாவம்கெடும் காழியூரனாகிய தமிழ்
ஞானசம்பந்தன;் கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல ஞானசம்பந்தன்;
ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் அருளிய கோவை ஆதலின்,
கலியைத் தீர்க்கும் கோவை எனலும் ஆம். கலியுகத்துக்கோவை,
கலிவிருத்தக்கோவை எனல் பொருந்து மேற் கொள்க.
பதினொன்றாம்
திருமுறை
என்று
மடியவ ருள்ளத்திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே.
-நம்பியாண்டார்
நம்பி.
திருவிளையாடற்
புராணம்
தொண்டர்
நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.
-பரஞ்சோதி
முனிவர்.
|
|