பக்கம் எண் :

366

 13. திருக்கோழம்பம்

பதிக வரலாறு:

     ஆளுடையபிள்ளையார், ‘திருவாவடுதுறை அமர்ந்தாரைப் பணிந்து
றைந்து போந்து திருக்கோழம்பம் சேர்ந்தார். அங்குக் ‘கொன்றைவார்
சடைமுடியரை இறைஞ்சி என்றும் நீடிய இன்னிசைப் பதிகம்’ ஆகிய
இதனைப் பாடினார்.

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 149   பதிக எண். 13

திருச்சிற்றம்பலம்

1601.



நீற்றானை நீள்சடை மேனிறை வுள்ளதோர்
ஆற்றானை யழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்ப மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிட ரேகவே.        1
1602.



மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.   2


     1. பொ-ரை: திருநீறு அணிந்தவன். நீண்ட சடைமுடி மீது பெருகி
வந்த கங்கை ஆற்றைத் தாங்கியவன். அழகமைந்த மெல்லிய தனங்களைக்
கொண்ட உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன்.
அத்தகையோன் பொழில் சூழ்ந்த கோழம்பம் என்னும் தலத்தில் விடை
யூர்தியனாய் உள்ளான். ‘நும் துன்பங்கள் நீங்க வேண்டு மாயின் அவனை
ஏத்துங்கள்’.

     கு-ரை: நீற்றானை-திருநீற்றை அணிந்தவனை நிறைவு-பூரணம்
ஆற்றானை-கங்கையாற்றை அணிந்தவனை. மென் முலையாள்-
உமாதேவியார். ஓர் கூற்றானை ஒரு (வாம) பாகத்தையுடையவனை.
பொழில்-சோலை. ஏற்றான்-எருது வாகனத்தன். இடர் ஏக ஏத்துமின்-
துன்பம் தொலையத் தொழுங்கள்.

     2. பொ-ரை: கருமைநிறம் பொருந்திய கண்டத்தினன். மான் கன்றை
ஏந்திய கையினன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த