1608.
|
விற்றானை
வல்லாரக் கர்விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே. 8 |
1609.
|
நெடியானோ
டயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டங்க வேடம் பயின்றானைக்
கடியாருங் கோழம்ப மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. 9 |
8.
பொ-ரை: விற்படையை உடைய வலிய இராக்கதர்களின் வலிய
வேந்தனாகிய இராவணனைத் தன் அழகிய கால் விரலால் நசுக்கியவன்.
கொடிய காலனைச் செற்றவன். புகழ் விளங்கும் திருக்கோழம்பத்திற்
பற்றுதல் உடையவன். அவன்மீது பற்றுக் கொள்வாரை வினைகள் பற்றா.
கு-ரை:
வில்தானை - விற்படை. வல் அரக்கர் - வலிய இராக்கதர்.
அசுரர் காரணம்பற்றி வருத்துபவர். இராக்கதர். ஒரு காரணமும் பற்றாது
வருத்துபவன்.
அரக்கர்
வேந்தன் - இராவணன். குற்றான் - சிறுமைப் படுத்தியவன்.
நசுக்கியவன் விரலாற் குற்றான் - என்று கொள்க. காலனைச்செற்றான்
-காலசங்காரக் கடவுள். பற்றான் - பற்றுதலுடையவன். பற்றுவார் - அடியர்.
பற்றா - தொடரா.
9.
பொ-ரை: நீண்ட வடிவெடுத்த திருமாலும் பிரமனும்
அறியமுடியாத வகையில் ஓங்கி நின்ற உருவத்தை உடையவன்.
பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் கோலம் பூண்டவன். மணம்
கமழும் திருக்கோழம்பம் மேவிய இடபக் கொடியினன். உள்ளம் குளிர
அவன் புகழைக் கூறுங்கள்.
கு-ரை:
நெடியான்-விக்கிரமன், திருமால். அயன்-அஜன், பிரன்,
படியான் - உருவத்தையுடையவன் (படியனார். தி.2 ப.79 பா.10)
பண்டங்கவேடம் - பாண்டரங்கம் என்னும் கூத்துக்காகக் கொண்ட திரு
வேடம். வெள்ளேற்றின் கொடி - இடபத்துவசம். எருதின்கொடி.
|