பக்கம் எண் :

372

14. திருவெண்ணியூர்

பதிக வரலாறு:

     பாலறாவாயர் வேதிகுடியினில் தமிழ்வேதத்தின் ஓங்கிசையை ஓதி,
முதல்வரைப் போற்றித் தொழுதுவந்து, திருவெண்ணிப்பதியினிற் கோயிலை
நண்ணிக் காதலின் வணங்கி, ‘சடையானை’ எனும் இப்பதிகத்தைப் பாடினார்.

பண்: இந்தளம்

ப.தொ. எண்: 150 பதிக எண்: 14

திருச்சிற்றம்பலம்

1612.



சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.        1
1613.

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத


     1. பொ-ரை: சடையின்மேல் சந்திரனையும் சிவந்த கண்களை
உடைய பாம்பையும் உடையவன். உடைந்த தலையோட்டில் பலிஏற்று,
ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவன். தேவர்களால் வணங்கப்படும்
திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவன்.
அவனையன்றிப் பிறரை நினையாது என் உள்ளம்.

     கு-ரை: சடையானை என்றதன் பின் கூறியதால், சந்திரனையும்
சிவந்த கண்களையுடைய பாம்பையும் அச்சடைமேல் உடையான் என்க.
அரா - பாம்பு. உடைதலை - உடைந்த தலை, பிரமகபாலம். ஊரும்விடை -
ஏறிச் செலுத்தப்படும் எருது. விண்ணவர் - தேவர். வெண்ணி: - வென்றி
என்பதன் மரூஉ. நன்றி - நண்ணி. பன்றி-பண்ணி, மன்று - மண்ணு,
கன்று - கண்ணு என்பனைவற்றிலுள்ள னகரமும் றகரமும் உற்ற
திரிபைநோக்குக. உள்காது - நினையாது.

     2. பொ-ரை: ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த
எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன்.