பக்கம் எண் :

373

வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.      2
1614.



கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.          3
1615.



மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.    4


வேதியர்களால் வணங்கப்பெறும் திருவெண்ணியில் விளங்கும் நீதி
வடிவினன். அவனை நினைய வல்லவர்களின் வினைகள் நில்லாது அகலும்.

     கு-ரை: சுண்ணம்-பொடி. ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை -
முதலும் முடிவுமில்லாத மறையோனை, வேதத்தை அருளியதால்
வேதியானான். நீதியை-தரும சொரூபியை. நினைதல் எளிதன்று. அரிதாகப்
பெறத்தக்கது ஆதலின் ‘வல்லார்’ என்றார்.

     3. பொ-ரை: கனியாய் இனிப்பவன். மனம் கனிந்து வழிபடுவோரைக்
கலந்து ஆட்கொள்ளும் முனிவன். மூவுலகங்கட்கும் தானே தலைவன்
ஆனவன். மேம்பட்டவன். நல்லவர்களால் வணங்கப்பெறும் வெண்ணியில்
எழுந்தருளிய இன்ப உருவினன். அவனை ஏத்துவார் குற்றம் இலராவர்.

     கு-ரை: கனிதனை - பழத்தை, கனிந்தவர் - மனங் கனிந்துருகி
வழிபடுவர். முனிதனை - மனனசீலனை, நனிதனை - மேம்பட்டவனை.
நனி - மிகுதி. உரிச்சொல்லடியாக நின்ற பெயர். நல்லவர் - சரியை,
கிரியை, யோகங்களில் முதிர்ந்த ஞானிகள், சைவநலமுடைய வரெனப்
பொதுப் பெயருமாம். இனிதனை - (இனிது+அன்+ஐ) இன்புருவானவனை.
ஏதம் - இருவினைக் குற்றம்.

     4. பொ-ரை: எல்லாப் பொருள்கட்கும் முன்னே தோன்றிய
பழையோன். மூவுலகங்கட்கும் தலைவனாய் விளங்கிக் காப்பவன்.