1616.
|
நீரானை
நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் தாரானைத் தையலொர் பாகமு டையானைச் சீரானைத்
திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை ஊரானை யுள்கவல் லார்வினை யோயுமே. 5 |
தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு
கலந்து அவர்களைப் பிணிப்பவன்.
அழகிய வெண்ணி நகரில் விளங்கும் தலைவன். அவனை ஏத்தாதவர்
என்ன பயனைக் காணவல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும்
பேய்களையே ஒப்பர்.
கு-ரை:
மூத்தான் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்
பொருளாயிருப்பவன். மூவுலகுக்கு ஒரு மூர்த்தி:- சிவ பரத்துவம் கூறியவாறு,
முற்பாட்டினிலும் காண்க. காத்தான் - மூவுலகையும் காத்தவன்,
காக்கின்றவன், காப்பவன். கனிந்தவரைக்கலந்தாட் கொள்ளல் மேலும்
கூறப்பட்டது. அழகமர் வெண்ணி என்றதால் தலச்சிறப்பு விளங்கும்.
அம்மான் - அரிய மகன். மகன் - கடவுள். மகள் - திருமகள், நாமகள்,
ஏத்தாதார் - துதித்து வணங்காமதார். ஏத்துதல் - தோத்திரத்தால் வழிபடல்.
சிவபிரானை ஏத்தாதவர் மக்கட் பிறப்பினராயினும் பேய் போன்றவரேயாவர்.
மனத்துன்னை நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்த்தேன் என்னும்
அருள்மொழிப் பகுதியைக் காண்க. திருவள்ளுவரும் வையத்தலகை
என்றார்.
5. பொ-ரை:
நிறைந்த நீரைக் கொண்ட கங்கையை முடிமிசைத்
தரித்தவன். அதனைச் சூழக் கொன்றை மாலையைப் புனைந்துள்ளவன்.
உமையம்மையை ஓர்பாகமாக உடையவன். புகழ் பொருந்தியவன்.
விளங்கும் வெண்ணியை விரும்பி உகந்த ஊராகக் கொண்டு
எழுந்தருளியிருப்பவன். அவனை நினைவார் வினைகள் நீங்கும்.
கு-ரை:
நிறைபுனல் - கங்கைநீர். தலையிற் கங்கையைச்
சூழக்கொன்றைமாலை யணிந்தான். திருவெண்ணியூர் அமர்ந்து உறைவான்
என்று இயைத்துக்கொள்க. தோத்திரம் புறப் பூசையினும் சிறந்தது. அகத்தில்
செய்யும் தியானம் அவ்விரண்டினும் பெரும்பயன் அளிப்பது.
திரிகரணங்களாலும்
ஆகும் வினைகளை அத்திரி கரணங்களாலும்
தீர்க்கும் வழிகள் தியானம். தோத்திரம், நமஸ்காரம், பூஜை முதலியவை.
அவற்றுள் தியானமே உத்தமம் ஆதலின், உள்க வல்லார் வினை ஓயும்
என்று அருளினார்.
|