பக்கம் எண் :

376

1619.



மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோண்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவா ராற்றலு டையாரே.    8
1620.



மண்ணினை வானவ ரோடும னிதர்க்கும்
கண்ணினைக் கண்ணனும் நான்முக னுங்காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை யடையவல் லார்க்கில்லை யல்லலே.    9


     கொள்ளப்பட்டது. மெய்-திருமேனி, மேய்ந்தான்-வேய்ந்தான்,
அணிந்தான். நீந்தான்-கடவுள்.

     8. பொ-ரை: பகைமை பூண்டவனாய்ப் பெருமை மிக்க கயிலை
மலையைப் பொருட்படுத்தாது விரைந்து அதனைச் சினந்து சென்று எடுத்த
இராவணனது பெருமை அழியுமாறு அவனுடைய விளங்கும் தோள்கள்
முடிகள் ஆகியவற்றை முரித்தவன். அழகமைந்த வெண்ணியில் உறையும்
எம் தலைவன் என வழிபடுபவர் குற்றங்களைப் பொறுப்பவன். அவனைப்
போற்றுவார் ஆற்றல் உடையவர் ஆவர்.

     கு-ரை: மறுத்தானை-பகைவனை. ஒன்றார் பொருந்தாதார் மறுத்தார்
என்பவைபோலப் பகைவரைக் குறித்தற்கு ஆளும் பெயர்களை அறிந்து
கொள்ளலாம். ‘மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் கறுத்தவன்’ (தி.1 ப.109
பா.8) செறுத்தான்-கோபித்தவனை. மறுத்தல், செறுத்தல் இரண்டும்
இராவணன் தொழில் இறுத்தல் - முரித்தல். இறுத்தவனும் பொறுத்தவனும்
சிவபிரான். ஆற்றல்-ஞானபலம் முதலிய யாவும்.

     9. பொ-ரை: ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன்.
வானவர்க்கும் மக்களுக்கும் கண் போன்றவன். திருமால் பிரமன் காண
இயலாத விண் வடிவானவன். தேவர்களால் வழிபடப் பெறும்
திருவெண்ணியில் விளங்கும் தலைமையாளன். அவனை அடைய
வல்லவர்கட்கு அல்லல் இல்லை.

     கு-ரை: மண்ணினை - அஷ்டமூர்த்தத்துள் பிருதுவிரூபமாக
இருக்கின்ற சிவனை. ‘உலகுக்கெல்லாம் ஒருகண்’ ‘உயிர்க்கெல்லாம்