1621.
|
குண்டருங்
குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு ளன்மின்
விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே. 10 |
1622.
|
மருவாரு
மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணிய மர்ந்தானை
உருவாரு மொண்டமிழ் மாலையி வைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே. 11
|
திருச்சிற்றம்பலம்
கண் என்பதனால்,
வானவர்க்கும் மனிதர்க்கும் கண்ணினை என்றார்.
பெண்ணவன்காண். . . . எல்லாம் காணும் கண்ணவன்காண் (தி.6 ப.48
பா.7) கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான்கண்டாய் (தி.6 ப.73. பா.2)
விண் - திருச்சிற்றம்பலம். அண்ணல் - முன்னைப் பழம் பொருட்கும்
முன்னைப் பழம்பொருள். அல்லல் - பிறவித் துன்பம், இம்மையில் உறும்
துயரம் எல்லாம்.
10. பொ-ரை:
குண்டர்களாகிய சமண புத்த மதத்தைச் சேர்ந்த
மிடுக்குடையோரின் மிடுக்கான உரைகளைக்கேட்டு நம் சமய நெறிகளை
வெறாதீர்கள். பகைவர் முப்புரங்களை எய்தவனாகிய திருவெண்ணியில்
உறையும் இறைவனுக்குத் தொண்டு பூண்டு அவனை அடைய வல்லார்க்குத்
துயர்கள் தோன்றா.
கு-ரை:
குண்டர் - கற்குண்டுபோலக் கட்டமைந்த உடம்பினர்.
சமணர், சாக்கியர், மிண்டர் - மிடுக்குடையவர். மிண்டவை - அதிக
பிரசங்கம் வெகுளேல்மின் - சைவாகமப்பொருள் உண்மைகளைக்
கோபித்து அலட்சியம் செய்யாதீர்கள். எதிர்மறைப் பன்மையேவல். மின்
பன்மை விகுதி, அது நீங்கின் ஒருமையாதல் தெரியும். விண்டவர் -பகைவர்.
11.
பொ-ரை:
மணம் பொருந்தியதும் பெரியோர் நிறைந்ததுமான
காழிப்பதியில் தோன்றி விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் நிறைந்து
திகழும் திருவெண்ணியில் அமர்ந்த இறைவனைப் போற்றிப் பாடிய
ஞானவடிவாக விளங்கும் இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் மண்ணுலகினும்
மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர்.
|