பக்கம் எண் :

378

     கு.ரை: மருவாரும் - மணம் நிறையும்; பொருந்தாதவரும் காழியைப்
பொருந்தி வழிபடு சிறப்புணர்த்தியதுமாம். மல்கு - நிறையும். திரு -நீர்வளம்
முதலிய எல்லாச் செல்வங்களும் ஆரும் - நிறைந்துள்ள. திகழ்தரு-
விளங்குகின்ற. (பிரசித்தி குறித்தது). அமர்ந்தான் - திருக்கோயில்
கொண்டிருக்கின்றவன். உரு ஆரும் - ஞானவடிவம் பூரணமாயிருக்கும்.
பொரு-(உறழ்பொரு) சிறப்பு. பூலோகத்தினும் மேலானது புவலோகம். அஃது
இங்குச் சிவலோகத்தை உணர்த்திற்று.

திருஞானசம்பந்தர் புராணம்

எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.

வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாண்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமுன் பாடினார்.

பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.

-சேக்கிழார்.