பக்கம் எண் :

379

15. திருக்காறாயில்

பதிக வரலாறு:

     திருவைந் தெழுத்தின் மெய்ம்மையை உணர்ந்த
பிள்ளையார், திருவாரூர்ப் புற்றிடங்கொண்டாரைப் போற்றிப் பணிந்து
வைகுங்காலத்தில், ‘வலிவலம் கோளிலி முதலாம்’ பதி பலவற்றுள்
ஒன்றான இத்திருக்காறாயிலை வணங்கிப் பாடியது இப்பதிகம்.

                      பண்: இந்தளம்

ப. தொ. எண்:151 பதிக எண்: 15

                     திருச்சிற்றம்பலம்

1623.



நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் றான்றொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவ ரூனமி லாதாரே.           1
1624.



மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமிலாதாரே.         2


     1. பொ-ரை: நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன்.
வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரை
மலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன் சீர் விளங்கும்
திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக்
கூறுவார் குற்றம் இலராவர்.

     கு-ரை: நீள்சடை மேல்நீரான் - நீண்ட சடையின்மேல் கங்கை
நீரையுடையவன், நிரை - வரிசை. தார் - மாலை தாமரைமேல் அயன்
-செந்தாமரையில் அமர்ந்திருக்கும் பிரமன். அயன் அஜன், தோன்றாதவன்
என்பது அடிச்சொற்பொருள். சீரான் - மேன்மையை உடையவன். ஊனம் -
பிறவி முதலிய குறைகள்.

     2. பொ-ரை: பிறைமதியைச் சூடியவன். வரிகளை உடைய
பாம்போடு ஊமத்தம் மலர் முதலியவற்றை அணிந்து நமக்கு ஊழை