1625.
|
விண்ணானே
விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே யென்பவ ரேதமி லாதாரே. 3
|
1626.
|
தாயானே
தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே. 4 |
அமைப்பவன். விதிமுறைகளைப்
பின்பற்றும் வேதியர்கள் வணங்கும்
நிதியானவன். நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட திருக்காறாயில்
எனப்படும் ஊரினன் என்று அவனைப் போற்றுவார் பாவம் இலராவர்.
கு-ரை:
மதி - பிறைச்சந்திரன். அரவு - பாம்பு. மத்தம் -
ஊமத்தம்பூ. விதியான் - ஊழானவன், பாக்கியமானவன், விதிக்குங்
கர்த்தா, விதித்தலையுடையவன். விதி உடை வேதியர் - வேதத்தில்
விதித்தவை செய்தலும் விலக்கியவை செய்யாமையுமாகிய விதியை
உடைய மறையவர். நெதி - நிதி, செல்வம்.
3.
பொ-ரை: வீட்டுலகுக்கு உரியவன். தேவர்களாலும்
போற்றி விரும்பப் பெறுமாறு மண்ணுலகில் வாழ்பவன.் நிலவுலகில்
வாழ்வோர்க்குக் கண் போன்றவன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த
திருக்காறாயிலில் நாம் எண்ணுதற்கு ஏற்றவாறு எளிவந்திருப்பவன்.
இவ்வாறு அவன்புகழ் கூறுவோர் ஏதம் இலராவர்.
கு.ரை:
விண் - வீட்டுலகம், உயிர்க்கெல்லாம் கண். (தி.2 ப.14
பா.9) எண் - எண்ணம். எண்ணான் - உள்ளத்திலிருப்பவன்.
எண்ணப்படாதவன், எண்ணுதற்குப் பொருளாயிருப்பவன். அளக்கும்
அளவாயுள்ளவன். ஏதம்-குற்றம், கேடு. துன்பம்(எல்லாம்).
4. பொ-ரை:
நமக்குத் தாயும் தந்தையும் ஆகி அவ்விருவர்
செய்யும் கடமைகளையும் புரிபவன். தன்மீது நல்லன்பு செலுத்துவோர்க்கு
மிக அணிமையில் இருந்து அருள்பவன். அல்லாதவர்க்குச் சேய்மையில்
இருப்பவன். புகழ் விளங்கும் திருக்காறாயில் என்னும் தலத்தில் மேவி
இருப்பவன் என இவ்வாறு போற்றுபவர் மீது வினைகள் மேவா.
|