1629.
|
சேர்த்தானே
தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 7 |
1630.
|
கடுத்தானே
காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 8 |
கு-ரை:
ஆற்றான் - ஆறுடையவன். வேதாகம வழியினன்,
ஆடரவு - ஆடும் பாம்பு. ஏற்றான் - தாங்கியவன். போற்று - துதி,
பொழில் -சோலை. நீற்றான் - திருநீற்றை யணிந்தவன்.
7. பொ-ரை: தீவினைகள்
தேய்ந்து அறுமாறு செய்து நம்மை
அவனோடு சேர்ப்பவன், தேவர்களால் போற்றப்படுபவன் நன்மா
முனிவர்கட்கு இடர் வாராது காப்பவன். மழைநீர் நிறைந்த வயல்கள்
சூழ்ந்த திருக்காறாயிலில் நிறைந்தவன். இவ்வாறு அவனைப்
போற்றுவாரை வினைகள் வெல்லா.
கு-ரை:
ஏத்தான் - புகழ்களை எடுத்துச் சொல்லுதலைப்
பெற்றவன். காத்தான் - தடுத்தவன். கார் - மேகம். வானோக்கும்
பயிர்க்கிடம் ஆதலின் கார்வயல் என்றார். விளைபயிர்த் தோற்றம்
பற்றியதுமாம்.
ஆர்த்தான்
- நிறைந்தவன்; ஊட்டியவன். ஆடா - வெல்லா.
அடராவே என்பது பின்னோர் பதிப்பின் பாடம். அடரா - தாக்கா.
8. பொ-ரை: காலனைக்
காலால் கடிந்தவன். கயிலாயத்தைப்
பெயர்த்த இராவணனுக்கு ஏதம் வருமாறும், முனிவர்கட்கு இடர் கெடு
மாறும் செய்தவன். விளக்கமான திருக்காறாயிலில் எழுந்தருளியிருப்பவன்
என இவ்வாறு போற்றுவாரை வினைகள் வெல்லா.
கு-ரை:
கடுத்தான் - கோபித் (து உதைத்)தான். ஆக+முனிவர்
என்புழி மகரம் இசைபற்றி நின்றது. இராவணனுக்கு-ஏதம் (துன்பம்)
ஆகுமாறும் முனிவர்களுக்கு இடர்கெடுமாறும் செய்தவன். கேழ்-(ஒளிரும்)
நிறம்.
|