பக்கம் எண் :

384

1633.



ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்திய ருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.    11

                     திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: புகழ் பொருந்தியதும் அழகு நிறைந்ததுமான
திருக்காறாயிலில் எழுந்தருளிய, ஆராய்ந்து கூறப்படும் புகழ் மொழிக்குப்
பொருளான இறைவன் திருவடிகளை ஏத்தி, அவன் அருள்பெற்ற,
நீர் பாய்ந்து. வளம் செய்யும் காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்
அருளிய இத்திருப்பதிகத்தை இயன்ற அளவில் இசையோடு பாடி
ஏத்துவார் வானுலகு ஆள்வர்.

     கு-ரை:ஏய்ந்த-பொருந்திய. ஆய்ந்தசீர் - வேதாகமங்களுள்
ஆராயப்பட்ட (பொருள் சேர்) புகழ். பாய்ந்த நீர்க்காழி:- வெள்ளப்
பெருக்கில் அழியாத உண்மை குறித்ததும் வளமுரைத்ததுமாம்.
வந்தவணம் ஏத்துமவர் வானமடைவாரே’ என்றது உணர்க.

       திருஞானசம்பந்தர் புராணம்

நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
     நலங்கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
     பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
     ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
     திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

-சேக்கிழார்.