பதிக
வரலாறு:
வேதந்தமிழால்
விரித்த வித்தகர், பந்தணைநல்லூரைப் பணிந்து,
திருமணஞ்சேரியில் தொண்டரொடும் சென்று தொழுது இசைபாடியபோது
அயிலாரும் அம்பு எனத் தொடங்கிப் பாடியருளியது இப்பதிகம்.
பண்:
இந்தளம்
ப.தொ.எண்:
152 |
|
பதிக
எண்: 16 |
திருச்சிற்றம்பலம்
1634.
|
அயிலாரு
மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 1 |
1635.
|
விதியானை
விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. 2 |
1. பொ-ரை:
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து,
குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு
கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த
திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம்
இல்லை.
கு-ரை:
அயில் - கூர்மை. அம்பு - திருமாலாகிய கணை. குயில்
வாய்மொழியம்மை என்பது அம்பிகை திருநாமம் பயில்வான்
-கோயில்கொண்டு பயில்பவன். பற்றி நிற்றல் - பற்று விடுமாறு பற்றி
வழிபடல்.
2. பொ-ரை:நீதி
நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித்
தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச்
சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது
பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.
|