பக்கம் எண் :

386

1636.



எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையு மாள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.     3
1637.



விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
உடையானை யூழிதோ றூழி யுளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 4


     கு-ரை: விதியானை - வேதாகமவிதியானவனை,
படைப்பவனாகியவனை; ‘கரியானை நான்முகனை’ (தி.6 ப.1 பா.1) ‘நாரணன்
காண்’ ‘நான்முகன்காண்’ (தி.6 ப.8 பா.3) நெதி - செல்வம். ‘நிதி’யின் மரூஉ
மொழி முதல் இகாரம் எகாரமாயொலிக்கும், ‘விலை -வெலை’ போல. வான்
மதி - வெண்பிறை, ‘வானூர்மதி’யுமாம். பாறும் -அழியும்.

     3. பொ-ரை: வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும்
தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும்
ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த
திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி
வழிபடுவார் வினைகள் நீங்கும்.

     கு-ரை: எய்ப்பு - இளைப்பு, மெய்ப்பான் - பொய்யாதல் இல்லாதவன்;
உண்மைப்பொருள். வீடும் - அழியும்.

     4. பொ-ரை: விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு
உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன்.
பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர்
பண்ணிசை பாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன்.
அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.

     கு-ரை: விடையான் - எருதேறி. படையான் - படைகளை யுடையவன்.
ஊழிதோறும் உள்ளபடை ஞானவாட்படை, ‘ஞான வாளேந்தும் ஐயர்’
(திருவாசகம். 613). மணஞ்சேரியில், ஆசிரியர் சென்றருளிய காலத்தில்
பண்ணிசை பாடுதல் சிறந்திருந்தது.