பக்கம் எண் :

388

1640.



எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.   7
1641.



எடுத்தானை யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.      8


‘மருவினிய மறைப்பொருளை’ ‘விரித்தானை நான்மறையோடங்கம் ஆறும்’
(தி.6ப.80 பா.6,10) ‘வேதத்தை வேதவித்தை’ (தி.6ப.79 பா.3) அதுபற்றிப்
பண்ணிசைகளையும் அளித்தருளினான். அஸ்யமஹதோ பூதஸ்ய நிஸ்வஸித
மேத த்ருக் வேதோ யஜீர் வேதஸ் ஸாம வேத: இருக்குவேதம்,
யஜு ர்வேதம், சாமவேதம் (முதலியவை) இம்மெய்ப்பொருளின் உயிர்ப்பு)
என்று பிருகதாரண் யோபநிடதம் (4,4,10,6,5,11) கூறுகின்றது. பகர்தல் -
சொல்லுதல், ஆன - ஆனவை, வினையாலணையும் பெயர். வழியான் -
வேதாகம வழி, திருவருள்நெறி, ஒளிசேர்நெறி. இழியாமை - இகழாமல்.

     7. பொ-ரை: யாவராலும் மனத்தால் எண்ணி அறியப் படாதவன்.
தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண்
போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண்
வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில்
உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்
பேசுவோர் பெரியோர் ஆவர்.

     கு-ரை: எண்ணானை - யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்
படாதவனை, மனாதீதனை. எண் - அளவு, பெண்ணான் - மங்கைபங்கன்,
கங்கைச்சடையன். பெரியோர்க்கு உரிய இலக்கணத்துள், சிவகீர்த்தனம்
பாடுதலும் ஒன்று.

     8. பொ-ரை: கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின்
அழகிய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன்.
மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து
உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும்
அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.