1647.
|
ஆகம்
மழகா யவள்தான் வெருவ
நாகம் முரிபோர்த் தவன்நண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கண்
மேகந் தவழும் வேணு புரமே. 3 |
1648.
|
காசக்
கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுவின் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே. 4
|
கு-ரை:
அரவு ஆர்கரவன் - பாம்பைக் கங்கணமாக அணிந்த
கையினன். அமை - மூங்கிற் கணுக்களின் இடைப்பகுதியை. ஆர் - ஒத்த.
திரள் - திரண்ட. குரவு - குராமலர்மாலை. கரவாது உவந் தீயுங்
கண்அன்னார் (குறள் 1061). குழலாள் - கூந்தலையுடைய அம்பிகை.
கூறன்-பாகத்தையுடையவன். கரவாத - மறைக்காத. கலந்தார் அவர்க்கு -
கூடியவராகிய அவர்க்கு. விரவு ஆகவல்லார் - நட்பாக வல்லவர்கள்
(வல்லவர்கள் வாழும் வேணுபுரம் என்க.)
3.
பொ-ரை:
அழகிய மேனியை உடைய உமையம்மை வெருவுமாறு
யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் உறையும் இடம். மக்கட்கு
விளைபொருள்களாகிய பயனைத்தரும் வயல்கள் சூழ்ந்துள்ள உயரிய
பொழில்களில் மேகங்கள் தவழும் வேணுபுரம் ஆகும்.
கு-ரை:
ஆகம் அழகு ஆயவள் - அழகிய திருமேனியை உடைய
அம்பிகை. ஆகம்-உடம்பு. வெருவ - அஞ்ச. நாகம் - யானை. உரி -தோல்.
இரண்டடியிலும் வந்த மகர ஒற்றுக்கள் இசைபற்றி வந்த விகாரம். போகம் -
வயல்விளைவாகக் கிடைக்கும் உணவுப்பொருள்கள். முதல் போகம்
இரண்டாம் போகம் என்னும் வழக்கு உணர்க. பொழில்கண் மேகம்
என்பதில் கண் உருபும், கள் விகுதியும் ஆகப்பிரித்துப் பொருள் கூறலாம்.
4.
பொ-ரை:
முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில்
எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய ஈசனுக்கு இடமாவது; இனிய
தேன் நிறைந்ததும் மணம் நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம்
அலைகள் காற்று வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த வேணுபுரம்
ஆகும்.
|