பக்கம் எண் :

404

 19. திருநெல்லிக்கா

பதிக வரலாறு:

     தேவூர் அணைந்து போற்றிய திருஞானசம்பந்தர், திருநெல்லிக்காவைப் பணிந்து பாடியது இத்திருப்பதிகம்.

                      பண்: இந்தளம்

ப.தொ.எண்: 155                               பதிக எண்: 19

திருச்சிற்றம்பலம்

1666.



அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்
நிறத்தா நெல்லிக்கா வுள்நிலா யவனே. 1
1667.

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்


     1. பொ-ரை: நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக்
காத்தலாகிய அறத்தை மேற் கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த
அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் பலராலும்
நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய
அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன்.

     கு-ரை: அறத்தால் - தருமத்தை நிலை நிறுத்தவேண்டி, உயிர் காவல்
- உயிர்களைக் காத்தல். மறம் - அதர்மம். மாண்பு - மாட்சி. தெரிவு -
விளக்கம். தீ நிறத்தான் - அழல் வண்ணன். வெண்டிங்கள் நிறத்தான் -
பவளம்போன்ற திருமேனியில் பால் போலும் திருவெண்ணீற்றைப் பூசிய
திருக்கோலத்தால், வெண்டிங்கள் போலும் தண்ணொளியுடையவனான
பரமசிவன், நிலாயவன்-நிலவி நின்றவன். நிலாயவனே நிறத்தான் என்றும்
இயையும். ‘தான்’ அசையுமாம். மேலும் இவ்வாறே அசையாதலாம்.

     2. பொ-ரை: நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும்