|
விதிதான்
வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2 |
1668.
|
நலந்தா
னவன்நான் முகன்தன் தலையைக்
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 3 |
மாலையாகவும் கொண்டவன்,
மதிசூடிய வீரன், விதியாகவும்
வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.
கு-ரை:
பதி இடுகாடு. தொங்கல் - (மாலை) கொன்றை. மதி -
பிறை. மைந்தன் - வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம்
அவனன்றி வேறில்லை என்றபடி. விழுப்பம் - மேன்மை. திருவருளே
தனக்கு மேலொன்றில்லாச் செல்வமாதலின் விழுப்பம் பயக்கும் நெதி
எனப்பட்டது. செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே சிவமேபெறும்
திரு சென்றடையாத திரு சென்றடையாச் செல்வன் என்பன
காண்க.
நிலாயவன் பதி இடுகாடு; தொங்கல் கொன்றை என்றும் நிலாயவனே
மைந்தனும் விதியும் வினையும் நெதியும் என்றும் கொள்க.
3. பொ-ரை:
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன்,
நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக்
கொண்டு கபாலி எனப் பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன்.
புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன்.
கு-ரை:
நலம் தான் அவன் - அவனே நலம், மங்கலம். சிவம்
அல்லாது வேறு நலம் உயிர்கட்கு இல்லை. குறைவிலாமங்கல குணத்தன்
(காஞ்சிப் புராணம் திருநெறிக் 23) நகராநலம் (தி.2ப.19பா.11) பிரமனது
தலையைக்கிள்ளிக் கையிற்கொண்ட வரலாறு முற்பகுதியிற் கூறப்பட்டது.
கபாலி - பிரமகபாலத்தைத் தாங்கியவன். புலம் - சிவஞான சொரூபம்.
புகழால் எரிவிண் - கீர்த்தியால் விளங்கும் வானம். விண்புகழும் நிலம்
-வானோர் துதிக்கும் சிவதலம் (திருநெல்லிக்கா). நலம்தான் கபாலியும்தான்,
புலம்தான், நிலம்தான் என்று கொள்ளின், நிலம் என்பது மிசை நிலம்,
வீட்டுலகு ஆம். நிலமிசை நீடுவாழ்வார் (குறள்3) மீதானம் (திருக்களிறு).
|