1675.
|
கனத்தார்
திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 10 |
1676.
|
புகரே
துமிலா தபுத்தே ளுலகில்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே. 11 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை:
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால்
உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து
அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் என் அத்தனே
காப்பாற்று என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை
வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில்
அழியுமாறு மனத்தால் நினைத்தவன்.
கு-ரை:
கனத்து ஆர் திரை - மேகத்தால் உண்ணப்படுங் கடல்,
ஈண்டுப் பாற்கடல் என்க, திரை - அலை, ஆகுபெயர். மாண்டு - பெருகி,
அழல் - வெப்பம், கான்ற - வீசிய, உமிழ்ந்த. என் அத்தா என்று
தேவர்வேண்ட, வாங்கி அது உண்ட கண்டன் என்க. மாண்பு - மாட்சி.
11.
பொ-ரை: குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும்
தனக்கு
ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள்
எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட
ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம்
அற்றவர் ஆவர்.
கு-ரை:
புகர் - குற்றம். புத்தேள் உலகு - தேவருலகம். நிகரா
-ஒப்பாகாத. நகராநலம் - அழியாத நன்மை, சிவம், சொன்ன - சொல்லிய.
இப்பாமாலையை. பகர்வார் - பாடித் தொழுவார்.
|