பக்கம் எண் :

410

 20. திருஅழுந்தூர்

பதிக வரலாறு:

     ஞானப்பாலுண்டவர் திருநல்லம் முதலிய திருப்பதிகளைப் பணிந்து
திருவழுந்தூர் மாடக்கோயிலை அடைந்தார். அம் மாமடம் மகிழ்ந்த
வான்பொருளினை வணங்கிப் பாடிய பதிகம் இது.

பண்: இந்தளம்

ப. தொ. எண்: 156                            பதிக எண்: 20

திருச்சிற்றம்பலம்

1677.



தொழுமா றுவல்லார் துயரதீ ரநினைந்
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 1
1678.

கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே    


    1பொ-ரை: தொழும் வகையி்லும், பிறவித்துயர் தீர நினைந்தெழும்
வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய
மறையவர் வழிபாடு செய்ய, ‘பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள
மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்’.

     கு-ரை: திருவழுந்தூரிலுள்ள வேதியர் (கட்டி) வழிபாடு செய்யும்
பெரியமடத்தில் (பா.3) சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவ்வேதியர்கள்
சிவபிரானைத் தொழும் வகையிலும், பிறவித் துன்பம் போயொழிய
நினைந்தெழும் வகையிலும், இசை பாடிட விம்மி அழும் வகையிலும்
வன்மையுற்ற பயிற்சியுடையவர்கள், அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன்
மரூஉ. இது புலவர் செய்து கொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர்
- புலிசை, மறைக்காடு - மறைசை, ஆவடுதுறை - துறைசை முதலிய அறிக.
தொட்டிக்கலை - கலைசை, திருவோத்தூர் (வேதபுரி, மறைநகர்) - மறைசை
என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள.

     2. பொ-ரை: ‘கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே!
உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே!