பக்கம் எண் :

411

அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடமே வினையே.   2
1679.



கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடமன் னினையே.   3
1680.



வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடமன் னினையே.    4


வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும்
மறையவர் தலைவனே’! எனத் தொழ, ‘பெருமானே! நீ சிறந்த மடம்
எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்’.

     கு-ரை: பாற்கடல், உடலும், உயிரும், உணர்வும், எழிலும் ஆக
இருப்பவன் சிவபிரான், அடல் - வலிமை, கொலையுமாம். ‘கொல்லேறு’
விடலே - தலைவனே.

     3. பொ-ரை: ‘பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே!
கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள்
இல்லாதவனே’! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும்
அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில்,
பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய்.

     கு-ரை: கழிகாடலனே - சுடுகாட்டில் (இரவில்) ஆடுபவனே,
‘கரிகாடலினாய்’ (தி.2ப.21பா.8) ‘சுடலையாடி’. கனல் ஆடலினாய் - தீயில்
ஆடுதலையுடையவனே. பழிபாடு இலனே - பழிக்கப்படுதல் இல்லாதவனே.
அழிபாடு - அழிவுபடுதல்.

     4. பொ-ரை: அன்பர்கள் ‘வானே! மலையே!’ என்று கூற மன்னிய
உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய
மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும்
பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே’ எனப் போற்றப், ‘பெருமானே!
நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்’.