பக்கம் எண் :

412

1681.



அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியுந் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே. 5
1682.



நறவார் தலையின் நயவா வுலகில்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடமன் னினையே
.    6


     கு-ரை: வான் - வானம். வானம் மலை என்று தொழமன்னிய
உயிரே. வானே என் மலையே என மன்னும் உயிர், தொழுவார்
தொழு -வணங்குவார் வணங்குதற்குரிய. தாள் - திருவடி. ஆனே:-
பசுபதி என்னும் பொருட்டு. ஆன் - பசு. அழுந்தையவர் - திருவழுந்தூர்
மறையோர். எம்மானே - எம்பெருமானே, என - என்று கூவித்தொழ.

     5. பொ-ரை: அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில்
உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில்
ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு,
உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ
நினைக.

     கு-ரை: இலையார் படை - திரிசூலாயுதம். இவையே நிலையான
செல்வம். ஏனைய அழியும் என்றவாறு.

     6. பொ-ரை: அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன்
பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே!
நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில்
வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம்
எனப் பெயரிய கோயிலில் உள்ளாய்.

     கு-ரை: தேன், நயவா - நயமுடையவன். நயம் - மகிழ்ச்சி. இன்பம்,
நன்மை, நீதி, உலகில் பிறவாதவன் - பிறவா யாக்கைப் பெரியோன்’
‘பிறப்பிலி இறப்பிலி’ (பாரதம்). பிணி இல்லவன் - நோயில்லான். அறை -
ஒலி.