பக்கம் எண் :

414

1685.



மணிநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடலம் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
பணிமா மடம்மன் னியிருந் தனையே.      9
1686



முடியார் சடையாய் முனம்நா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழமா மடம்பற் றினையே.     10
1687.

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப் பெருமா னவனைத்


வேரியார் (தேன்போலும் இனியர்), என்பதன் முதற்குறுக்கம் எனல்
அமைவுடையதன்று.

     9. பொ-ரை: மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய
இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது
உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில்
மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக
எழுந்தருளியுள்ளாய்.

     கு-ரை: மணிமுடி - ரத்நகிரீடம். அரக்கன் - இராவணன், நெரித்த
-நொறுங்கிய, அணி - அழகு. பணி - பணிகின்ற.

     10. பொ-ரை: சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால்
பிரமன், ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய
முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர்
விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப்பெயரிய
கோயிலில் நீ விளங்குகின்றாய்.

     கு-ரை: முடியார் சடையாய் - சடைமுடியுடையாய், நெடியான்
-திரிவிக்கிரமனாகிய மாயோன். அடிமேல் - அடிமுடி, படியால்-விதிப்படி.
பற்றினை - பற்றாகக் கொண்டாய்.

     11. பொ-ரை: எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய
மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய
ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன்