பக்கம் எண் :

416

 21. திருக்கழிப்பாலை

பதிக வரலாறு:

     பாலறாவாயர் மன்றாடும் ஐயன் திருக்கூத்துக் கும்பிட்டு அணைவுறும்
நாளில் கைம்மான் மறியார் கழிப்பாலையுள் அணைந்து இம் மெய்ம்மாலைச்
சொற்பதிகம் பாடினார்.

                   பண்: இந்தளம்

ப. தொ. எண்: 157                           பதிக எண்: 21

                  திருச்சிற்றம்பலம்

1688.



புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.   1
1689.



துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுகந் தவனே யிறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத் தஇடர் கெடுமே.    2


     1. பொ-ரை: கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே!
முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில்
நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய
நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.

     கு-ரை: புன்சடையாய் - பொன்போலும் சடையுடையாய், அரணம்
-திரிபுரக்கோட்டை, திரிபுரத்தை விழித்தெரித்தான் என்றும் வரலாறுண்டு.
கனல் - தீ, உன வார்கழல் - உன்னுடைய நீள்கழலடிகள். (பார்க்க:
தி.2ப.2பா.9) உள்குதும் - தியானம் செய்வோம்.

     2. பொ-ரை: தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய
உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக்கொண்டு
மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால்