பக்கம் எண் :

417

1690.



நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் அவையே.   3
1691.



எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.     4


எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த
இடர் கெடும்.

     கு-ரை: இறைவா! கழிப்பாலை உள்ளாய்! (உன்) கழல் ஏத்த (எம்) இடர்
கெடும் என்று இயைத்துக் கொள்க. தூ - தூய்மை. எல்லாப் பொருள்கட்கும்
பற்றுக்கோடு. ‘பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் அடக்கிக்
கரக்கினுங்கரக்கும்’ (புறம் - கடவுள் வாழ்த்து) என்றதன் உரையைக் காண்க.

     துணை - துணைவி. இணை - இருவரென்னாதவாறு இணைதல், எயில்
- திரிபுரம், எய் - எய்த, எய் கழிப்பாலை உள்ளாய் -வினைத்தொகை.
‘கழிப்பாலையுள்ளாய்’ என்பது சிவனென்னும் பொருட்டாய் எய்யென்னும்
பகுதியொடு தொக்கு வினைத் தொகையாயிற்று.

     3. பொ-ரை: மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக்
கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி
முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப் பாலையில்
எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.

     கு-ரை: நெடியாய் - நீண்டவனே; குறியாய் - குறியவனே, புன்சடைமுடி
- பொன்போலும் செஞ்சடைமுடி, சுடுவெண் பொடி - திருநீறு. முற்று
அணிவாய் - முழுதும் அணிவாய். கடி - மணம். அடியார் - யான்
எனதென்னும் செருக்கற்றவர்.அவலம் அடையா.

     4. பொ-ரை: அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே!
நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்