1693.
|
பிறையார்
சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தஇடர் கெடுமே. 6 |
1694.
|
முதிருஞ்
சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே. 7 |
6.
பொ-ரை: பிறையணிந்த சடையினனே! பெரியோனே!
பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய்
உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த
கழிப் பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை
ஏத்த இடர்கெடும்.
கு-ரை:
ஆர் - பொருந்திய. பெரியாய் - முழு முதல்வனே. பெருமை-
பரத்துவம். பெரிய மறை ஆர்தரு வாய்மையினாய் வேதத்திற் சொல்லப்பட்ட
உண்மைப் பொருளானவனே. மகர மெய் விரித்தல் விகாரம்.
இறை
ஆர் கழல் - (எங்கும்) தங்குதலுடைய திருவருளாகிய கழல்.
இறை - இறைமையும் ஆம்.
7. பொ-ரை:
முதிர்ந்த சடைமுடியின் மேல் விளங்கும்
வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே!
கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும்
வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு
நடுக்கத்தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.
கு-ரை:
கதிர் வெண்பிறை:- வெண்மை கதிர்க்கும் பிறைக்கும்
உரியது. எதிர்கொள்மொழி - முன்னிலை மொழியாகிய துதிகள். அதிரும்
நடுக்கத்தை விளைக்கும். ஆயின ஆசு - ஆனவையாகிய குற்றங்கள்,
பெயரெச்சமும் ஆம். அரன்பணியில் நின்றிடவும் அகலுங்குற்றம்
ஆசுபடுமல மாயை அருங்கன்மம் அனைத்தும் அகலும். (சித்தியார்
பா.304 291.) 106
|