பக்கம் எண் :

420

1695.



எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே.        8
1696.



நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.    9
1697.

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனர்நுண் துகிலா டையரும்


     8. பொ-ரை: தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை
அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில்
கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன்
திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்.

     கு-ரை: எரிஆர்கணை - அக்கினியை நுனியிற் பெற்ற திருமாலாகிய
பாணம். எயில் - (முப்புரம்) மும்மதில், கரிகாடல் - கரிந்த காடு.
காழிகாடலனே (பதி.156, பா.3) கழிகாடு ஆடலனே என்பதன் விகாரம்
என்றாருமுளர். உரிது - உரியது.

     9. பொ-ரை: நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும்
அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு
ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து
எரித்தவனே! உன்னுடைய நீண்டதிருவடிகளையே தொழுது நினைவார்க்கு
வினைகள் இல்லையாகும்.

     கு-ரை: நலம் - காத்தற்றொழிலாகிய நன்மை, அழகும் ஆம். உன
-உன்னுடைய. (ஆறனுருபு பன்மை பார்க்க: தி.2 ப.2 பா.1). உன்னுமவர்
-தியானம் புரிபவர். எயில் எய்தவன் - திரிபுராரி, முப்புரமெரித்த முதல்வன்.
வினைதான் இலதாம் என்க.

     10. பொ-ரை : தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத்
தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும்