|
அவர்கொண்
டனவிட் டடிகள் உறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 10 |
1698.
|
கழியார்
பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியா ரிமையோ ரொடுகே டிலரே. 11 |
திருச்சிற்றம்பலம்
பழுப்பு நிறம் ஏற்றிய
நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும்
புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை
அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும்,
உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம்
நினைத்துப் போற்றுவோம்.
கு-ரை:
சமண் வேடர்க்குரிய தொழிலன்று. தவர்
(தவத்தோர்)க்குரிய தொழிலை(ப்போலியா)க் கொண்டவர். துவர் - பழுப்பு
நிறம். நுண்துகில் -மெல்லிய துகில். துகில் - ஆடை; ஈண்டு
இருபெயரொட்டு, அவர் -அப்புறப்புறச்சமயத்தார். கொண்டன - கொண்ட
கொள்கைகள், வினையாலணையும் பெயர். அடிகள் - பரமேசுவரன். உவர்
கொண்ட கழிப்பதி - உவர் நீர் கொண்ட கடற்கழியிலுள்ள பாலைப்பதி.
உள்குதும் என முதற்பாட்டிற் கூறியதே முடிவிலுங் கூறியதால் சிறப்பாகத்
தியானம் புரிதற்குரிய தலமென்றுணர்க. மூவர் திருப்பதிகங்களும்
இத்தலத்தின் தனிச்சிறப்பை விளக்குகின்றன.
11. பொ-ரை
: உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்
பாலைத்தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை
நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய
இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர்
வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர்
ஆவர்.
கு-ரை:
காவலன் - சிவபிரான். மறைஞானசம்பந்தன் என்ற
திருப்பெயர் வேதநெறி தழைத்தோங்கப் புனிதவாய் மலர்ந்தழுத
சிறப்பிற் பெற்றது. அகரம் - ஆறனுருபு பன்மை. வழிபாடு இவை -
இத்திருப்பதிகப்பாடல் வழிபாடு, இமையோரொடு கெழியார் -வானோரொடு
பொருந்திய விளங்குவார். கேடு இலர் - பிறவி முதலாய கேடு
இல்லாதவராவர்.
|