பதிக
வரலாறு:
தமிழ்விரகர்
அரதைப்பெரும்பாழி, திருச்சேறை, திருநாலூர் என்னும்
தலங்களை வழிபட்ட பின், குடவாயிலை அடைந்து பெருங்கோயிலை
வணங்கிப் பாடியது இத்திருப் பதிகம்.
பண்: இந்தளம்
ப. தொ. எண்:
158 பதிக
எண்: 22
திருச்சிற்றம்பலம்
1699.
|
திகழுந்
திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவாயின் மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 1 |
1700.
|
ஓடுந்
நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல் |
1.
பொ-ரை:
குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும்
பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும்
திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும்,
அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான்.
கு-ரை:
திகழும் - அவர் அவர்க்குள்ள புவனங்களில்
விளக்கம்பெறும். புகல - விரும்பித்துதிக்க. நிகழும் - பிரசித்தி பெற்றுள்ள.
(பா.11இல்) பெருங்கோயில் என்று உணர்த்தியதால் ஆசிரியர் திருவுள்ளம்
அதனது பெருமையில் ஈடுபட்டமை புலனாகும். வேறு சில தலங்களிலும்
கோயிற்பெருமை கூறப்பட்டுள்ளது.
2. பொ-ரை:
குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில்
எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும்,
பிறைமதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான
|