|
குழகன்
குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 2 |
1701.
|
கலையான்
மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந்த பிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 3 |
1702.
|
சுலவுஞ்
சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடம்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 4 |
தனது கொடியில் விடை
இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம்
உடையவன்.
கு-ரை:
நதி - கங்கை. மதி - பிறை. உரகம் - பாம்பு, மார்பால்
நகர்வது. உரம் - மார்பு. கம் - செலவு. தொல்கொடி - பழங்கொடி,
கொடிமேல் விடைகூடும் என்றியைக்க. குடவாயில்தனில் நீடும்
பெருங்கோயில் என்றதால், அதன் பழமையும் பெருமையும் விளங்கும்.
3.
பொ-ரை: குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும்
பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த
திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில்
ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும்
மறக்கருணைபுரிய, கொலைத் தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும்
விளங்குபவன்.
கு-ரை:
கலையான் - பீதாம்பரதாரி, திருமால். மறையான் - வேதா
ஆன பிரமன். கனல் - நெருப்பு, மலையாள் - இமாசல குமாரி. கொலை
ஆர்சிலை - மேருமலையாகிய வில்லுக்குக் கொலை திரிபுரசங்கார
கிருத்தியம். நிலை - திருக்கோபுர நிலை.
4.
பொ-ரை: குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில்
எழுந்தருளிய
பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய
தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச்
|