1703.
|
என்றன்
உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 5 |
1704
|
அலைசேர்
புனலன் அனலன் அமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிரும்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 6 |
சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு
நடம்புரியும் இளையோன்.
கு-ரை:
சுலவும் - சுற்றும். நலம் - அழகு. நகைசெய்ய - மகிழ,
சிரிக்க என்றுமாம். குழகன் - இளைஞன். நிலவும் - ஒளிவிடும். நிலா,
நிலவு என்பன வெள்ளொளியைக் குறித்தல் அறிக.
5.
பொ-ரை: குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய்
நிற்கும்
பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும்
தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய
மலையில் உறைபவன்.
கு-ரை:
என்றன் உளம் மேவி இருந்த பிரான் என்று சிவ ஞான
முண்டார் அன்றி மற்று எவர் சொல்லத்தக்கார்? கன்றல்மணி - கன்றிய
நீலமணி. கன்றன் - இளைஞன், மான் கன்றுடையவன் எனலுமாம். மிடறன-
திருக்கழுத்தினன். மிடற்றன் என்னற்பாலது ஒற்றிரட்டாது நின்றது. எயிறன்,
வயிறன், கயிறன், எனல்போல (தி.2. பா.23 ப.1) பார்க்க.
6.
பொ-ரை: குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில்
எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல்
ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்:
நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன்.
கு-ரை:
புனல் - கங்கை. அனல் - தீ. அமலன் - மும்மல
மில்லாதவன். (எண்குணத்துள் ஒன்று) தலைசேர் பலியன் - பிரம கபாலத்திற்
பலி பெறுபவன். சதுரன் - மூவர்க்கும் முதல்வன், விதிரும்-
|