1705.
|
அறையார்
கழலன் அழலன் இயலின்
பறையாழ் முழவும் மறைபா டநடம்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 7 |
1706.
|
வரையார்
திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 8 |
1707.
|
பொன்னொப்
பவனும் புயலொப் பவனும்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான் |
நடுங்கும். படை - திரிசூலம்.
மழுவாயுதம் முதலியன.
7.
பொ-ரை: குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங்
கோயிலில்
விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்தவன்: அழல்
ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட
நடனமாடும் அழகன்.
கு-ரை:
அறை - ஒலி. இயலின் பறை - இசையியலின் கண் அமைந்த
வாத்தியம். நடம் - திருக்கூத்து. குறையா அழகன் -பூரணாலங்காரன்.
8.
பொ-ரை: மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த
குடவாயிலில்
நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும்
இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன்
மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத்
தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான்.
கு-ரை:
வரைஆர் - மலையை ஒத்த. வரை - கயிலை. ஆர -
சுமை(யாக அழுந்திப்) பொருந்த. வகரமெய்விரித்தல் விகாரம். வரை
ஆர்மதில் - மலைகளைப்போல உயரிய மதில்கள்; பெருங்கோயிலும்
அத்தகையதே. வரையார் - வழிபாட்டை ஒழியாத அடியார் என்றும்
உரைத்தல் கூடும். அரக்கன் - இராவணன்.
|