|
கொன்னற்
படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 9 |
1708.
|
வெயிலின்
நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பால்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 10 |
1709
. |
கடுவாய்
மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத் |
9. பொ-ரை:
குடவாயி்லில் நிலை பெற்ற பெருங்கோயிலில்
மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல்
நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில்
உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல
படைக்கலன்களை ஏந்தியவன்.
கு-ரை:
பொன் ஒப்பவன் - பிரமன், புயல் ஒப்பவன் - கார்
வண்ணன், மால், தன்ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான் -தனக்குவமை
யில்லாதவனாகியச் சோதிப் பிழம்பாய் ஓங்கிப் பெருகிய பரசிவன்.
கொல்நல்படை:- பா. 6. பார்க்க.
10.
பொ-ரை: குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில்
உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய
சமணர்கள், விரி்த்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய
சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்;
இளமையான தோற்றத்தை உடையவன்.
கு-ரை:
நிலையார் - நிற்றலை உடையவர், வெயில் காய்பவர்
என்றபடி, உரை - பிறமதபோதனை. குயிலன் - குயிலாதவன். பதியாதவன்.
குயிலல் - பதிதல், செய்தல், சொல்லல் எனல் இங்குப் பொருந்தாது.
11. பொ-ரை:
வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய
குடவாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில்
விளங்கும் இறைவனை, நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியின
|