பக்கம் எண் :

427

தடமார் புகலித் தமிழார் விரகன்
வடவார் தமிழ்வல் லவர்நல் லவரே. 11

திருச்சிற்றம்பலம்


னாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த
இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர்.

     கு-ரை: கடுவாய் - வேகம் வாய்ந்த. நீர்மலி குடவாயில் என்று அதன்
வளம் உணர்த்தியபடி. ‘நெடுமாபெருங்கோயில்’ என்றது இப்பதிகம் முழுதும்
கூறியவற்றால் உறுதிப் படுகின்றது. திருமுறைகளுள் பெருங்கோயிலையும்
சிறுகோயிலையும் பிரித்துணர்த்துங் குறிப்பு மிகுதியாயுளது. ‘அதிகைமாநகர்’
என்பது முதலியவற்றை உணர்க. மாநகர் - பெருங்கோயில்.

          திருஞானசம்பந்தர் புராணம்

பாடும்அர தைப்பெரும் பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.

-சேக்கிழார்.

பதினொன்றாம் திருமுறை

திருஞானசம்பந்த னென்றுலகஞ் சேர்ந்த
     ஒருநாமத் தாலுயர்ந்த கோவை - வருபெருநீர்ப்
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
     மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
     தொலைவில் புகழ்ச்சிறுத் தொண் டற்கும் - குலவிய
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
     மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய
கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்
     வாதி லமணர் வலிதொலையக் - காதலால்
புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை
     வண்கழுவில் தைத்த மறையோன். . .

-நம்பியாண்டார் நம்பி.