பக்கம் எண் :

428

 23. திருவானைக்கா

பதிக வரலாறு:

     திருச்சிராப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் திருவானைக்காவை
அடைந்த பெருமானார், அங்கு வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
வணங்கி, யானை வழிபட்டதையும் கோச்செங்கட்சோழ நாயனார் செய்த
அடிமையையும் அமைத்துப் பாடிய பண்ணுறு செந்தமிழ் மாலை இது.

பண்: இந்தளம்

ப. தொ. எண்: 159                          பதிக எண்: 23

திருச்சிற்றம்பலம்

1710.



மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.    1
1711.

கொலையார் கரியின் உரிமூ டியனே
மலையார் சிலையா வளைவித் தவனே


     1. பொ-ரை: நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என்
மகள், “மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக் கலனை
உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள்
பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய
எம் அழகனே! அருள்புரி”, என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.

     கு-ரை: மழை ஆர் மிடறா - மேகம்போலக் கறுத்த
திருக்கழுத்தினனே! உழை - மான், புல்வாய், மரை, கவரிவேறு, உழை
வேறு. கரவா - திருக்கையினனே. விழவு - திருவிழாக்கள். வெண்நாவல் -
ஜம்புகேச்சுரம். எம் அழகா என்னும் ஆயிழையாள் என்க. எனும் - என்று
அழைப்பாள். ஆய் இழையாள் - நுண்ணிய வேலைப்பாடமைந்த
ஆபரணத்தை அணிந்தவள். ஆராய்ந்திழைத்த இழையாள் எனலுமாம்.

     2. பொ-ரை: அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள்,
‘கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே,