பக்கம் எண் :

429

விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளா யெனுநே ரிழையே.  2
 1712.



காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்
பாலோ டுநெய் யாடிய பால்வணனே
வேலா டுகையா யெம்வெணா வலுளாய்
ஆலார் நிழலா யெனுமா யிழையே.    3
 1713.

சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே


மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும்
விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில்
விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்’ எனக் கூறுகின்றாள்.

     கு-ரை: கரி - யானை; கரத்தை உடையது என்னுங் காரணத்தால்
பெற்ற பெயர். உரி - தோல். மூடியன் - போர்வையன். மலை - மேரு கிரி.
சிலை - வில். விலையால் - விலைக்குப் பெறும் அடிமைத்தன்மையால். (பா.8)
நேரிழை - அன்மொழித் தொகை.

     3. பொ-ரை: என் ஆயிழையாள், ‘காலால் காலன் உயிரைப்
போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல்
ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின்
கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே! என்று பலவாறு கூறிகின்றாள். அருள்புரி.

     கு-ரை: காலனைக் காலால் உயிர்வீடு செய்தாய் - யமனைத்
திருவடியால் உதைத்து உயிரைப் போக்கியவனே. பால், நெய், தயிர்
மூன்றும் சொல்லி நிறுத்தி, ‘ஆனைந்து’ என்பது சைவ சம்பிரதாயம்.
கோமயம், கோசலம் இரண்டும் திருமுறையுட் கூறப்படாமை அறிக.
பால்வண்ணன்:- இறைவனுக்கு இத்தலத்தில் வழங்கிய திருப்பெயர்.
வேல்-திரிசூலம். ஆல் ஆர் நிழலாய் - கல்லால மரத்தின் நிழலின்கண்
வீற்றிருந்து அறம் உரைத்தவனே. ஆயிழை - அன்மொழித்தொகை.

     4. பொ-ரை : என் ஆயிழையாள், ‘மீன் கொடியை உடைய மன்மதன்
எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே,