பக்கம் எண் :

430

விறன்மிக் ககரிக் கருள்செய் தவனே
அறமிக் கதுவென் னுமென் ஆயிழையே.   4
 1714.



செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.      5
 1715.

குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய்


வலிமை மிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக்
கண்டு அறம் தவறுடையது’ என்று கூறுவாள்.

     கு-ரை: சுறவக்கொடி கொண்டவன் - மீன் கொடி உடைய மன்மதன்.
நீறு - சாம்பல். அது - பகுதிப் பொருள் அன்றி வேறு குறியாது.
விகுதிபோல் நிற்பது. அவர் முதலியன அங்ஙனம் நில்லா என்பது தமிழ்
மரபு. நீறாய் உறவிழித்த உத்தமன் என்க. நெற்றி விழித்த -நெற்றிக்கண்ணால்
விழித்த, நெற்றி - நெற்றிக்கண்; இடவாகுபெயர். உத்தமன் - மேலவர்க்கும்
மேலானவன். விறல் - வலிமை. கரி - யானை.

     5. பொ-ரை: ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என்
மகள், ‘செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழமன்னனுக்கு அழகிய
கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை
உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும்
பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!’ என்று பலவாறு
நைந்து கூறி உடல் சோர்வுற்றாள்.

     கு-ரை: செங்கட் பெயர் - கோச் செங்கட் சோழன் என்னும்
திருப்பெயர். செம்பியர்கோன் - சோழன். அம்கண் கருணை பெரிது
ஆயவன் - கண்ணிற்கு அழகாகிய கருணையில் மிக்குள்ளவன் என்றவாறு.
வெம்கண்:- கண்ணில் விளங்கும் சினக்குறிப்பை உணர்த்துவது. சாதியடை.
அங்கம் - உடம்பு, அவயவம் எனலுமாம். அயர்வு - சோர்வு, காதலால்
நேர்ந்தது.

     6. பொ-ரை: தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட
என் மகள், “கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும்