|
வென்றாய்
புரமூன் றைவெண்நா வலுளாய்
நின்றா யருளா யெனும்நே ரிழையே. 6 |
|
*
* * * * * * * 7
|
1716.
|
மலையன்
றெடுத்த அரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 8 |
1717.
|
திருவார்
தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் |
தொழில் வல்ல புலியினது
தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை
சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே,
வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்! என்று
அரற்றுகின்றாள்.
கு-ரை:
குன்று - கயிலை, புலியின் தன் தோல் என்றும் புரம்
மூன்றை வென்றாய் என்றும் கொள்க. நின்றாய் - திருக்கோயில் கொண்டு
வீற்றிருப்பவனே என்று எதிர்காலத்திற் கொள்க.
7. * * *
* * * *
8.
பொ-ரை: ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய
என் மகள்,
கயிலைமலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன
அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு
தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில்
வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய் என்று கூறுகிறாள்.
கு-ரை:
அரக்கன் - இராவணன். தொலைய - நொறுங்க. என்னும்
பொருட்டாய் நின்றது. வகரமெய் விரித்தல் விகாரம். (பார்க்க: பா.2.)
அலசாமல் - அலைக்காமல், வருத்தாமல், நல்காய் - வந்து அணைந்து
இன்பங்கொடுப்பாய். எனும் - என்பாள்.
9.
பொ-ரை: ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என்
மகள்,
திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி
|