|
விரையா
ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே. 9 |
1718.
|
புத்தர்
பலரோ டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே. 10 |
1719. |
வெண்நா
வலமர்ந் துறைவே தியனைக்
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன் |
காண மருவி வெருவுமாறு
அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும்
வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே! என்று கூறுகின்றாள்.
கு-ரை:
திரு - இலக்குமி. மருவா - மருவி. வெருவா - அச்சத்தால்
வாயால் அரற்றி (நிற்க) என்று ஒரு சொல் வருவித்து முடிக்க. வெருவி
(நிற்க) அழலாய் நிமிர்ந்தாய் என்றபடி. விரை - மணம். அரவா
-பாம்பணிந்தவனே. ஹர! வா எனலும் பொருந்தும். எம் அரனேயோ
என்றென்று
10.
பொ-ரை: ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய
என் மகள்
புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள்
ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள்
வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே,
அருளாய்! என்று கூறுவாள்.
கு-ரை:
அமண் - சமணர். பொய்த்தவர்கள் -மெய்த்தவரல்லாதவர்கள்;
பொய்த்தவத்தை யுடையவர்கள் என்று ஒரு மொழியும் தொடர்மொழியுமாக்
கொள்ளலாம்.
ஒத்தவ்வுரை:-
வகரம் விரித்தல் விகாரம். ஓரகிலார் - உணரமாட்டார்.
11.
பொ-ரை: வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும்
வேதங்களை
அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம்
|